ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, கலவை, சோளிங்கர், நெமிலி என மொத்தம் 6 தாலுகா உள்ளது. இந்த தாலுகாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு ஒப்புதல் அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.