வாணியம்பாடி ஆம்பூரில் பள்ளிவாசலில் சிறப்பு பக்ரீத் தொழுகை

70பார்த்தது
வாணியம்பாடி, ஆம்பூர், பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்கள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்கள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் புது ஆடைகள் அணிந்து தொழுகைக்கு பின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில்
நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி