திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் தியாகராஜன் என்பவர் அதே கோவிலில் உழவாரப் பணி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிடம் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு வருடங்களாக ஏமாற்றி வரும் அர்ச்சகர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் எஸ்பி ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கோயில் அர்ச்சகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அர்ச்சகர் தியாகராஜனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த
நிலையில் பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த அர்ச்சகர் தியாகராஜனை
தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.