திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வினை விரைவாக நடத்த வேண்டும் என மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு.
அப்போது அவர்கள் கொடுத்த மனுவில் 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தியது அதற்குப் பின்பு மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஜூன் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது.
அதற்குப் பின்பு ஜூலை மாதம் உத்தேச பட்டியலும் வெளியிடப்பட்டது அதற்குப் பின்பு இன்று வரை அதற்கான கலந்தாய்வு நடைபெறவில்லை பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் வேலை செய்த நாங்கள் வேலையை விட்டுவிட்டு படித்து தேர்வு பெற்றுள்ளோம் எங்களில் பெரும்பாலானவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள் பனிக்காலமும் குறைவு என்பதால் விரைந்து கலந்தாய்வு நடத்தி எங்களுடைய பணிக்கான ஆணையை உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.