ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களிடம் பணம் ஒப்படைப்பு

77பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் பணத்தை இழந்த நபர்களின் பணத்தை உரியவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் வேலூர் எடுத்த சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆன்லைனில் பணத்தை இழந்த நபர்களின் பணம் சுமார் 1, 77, 895 மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பொழுது சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், காவல் ஆய்வாளர் புனிதா, காவல் உதவி ஆய்வாளர் யுவராணி பெண் தலைமை காவலர் மணிமேகலை மற்றும் காவலர் ரேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி