ஆம்பூர் அருகே பயங்கர விபத்து

9592பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் இயங்கி வரும் தனியார்(பரிதா) ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 5 பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ கைலாசகிரி பேருந்து நிலையம் அருகில் வந்த போது நாய் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஹேமாவதி (44) ஆட்டோவுக்கு அடியில் சிக்கியுள்ளார் அவரை அங்கிருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு மார்பு பகுதியில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மற்றொரு ஆட்டோ மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமாவதி உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த சினேகா (20) அனிதா (27) மோகனா (32) ஜெயபாரதி (24) உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் லோகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி