சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

70பார்த்தது
வேலூர் மாவட்டம்.

வேலூரில் 6-வயது சிறுமிகயை பாலியல் சீண்டல் செய்த 55 வயது முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்து இருக்கிறது போக்சோ நீதிமன்றம்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியை சேர்ந்த அப்துல்கனி( தமிழ்நாடு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்) என்கின்ற 55 வயது முதியவர், 2022-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பனின் 6- வயது சிறுமியை சாக்லெட் கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் அல்துல்கனியை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், அப்துல்கனி சிறையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்தது உறுதியான நிலையில், அப்துல்கனிக்கு 30-ஆண்டுகள் சிறை தண்டனையும், 20-ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி