எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

62பார்த்தது
ஆம்பூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின.

ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகள் மீது கை போட்டு மகிழ்ந்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ. கஸ்பா பகுதியில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்தது. விழாவை காண்பதற்காக இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வீதியில் சீறிப்பாய்ந்த காளைகள் மீது கை போட்டு மகிழ்ந்தனர்.

மேலும் விழாவில் குறிப்பிட்ட இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 60 ஆயிரம் என 50க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி