மினி லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

1066பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் இருந்து விடியற்காலையில் மினி லாரி மூலம் கொத்தமல்லி லோடு ஏற்றிக்கொண்டு வேலூர் சென்று இறக்கி விட்டு மீண்டும் திரும்பிய போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் லாரி இடிபாடுக்குள் சிக்கிய லாரி ஓட்டுநர் சூளகிரி பகுதியை சேர்ந்த சாதிக் என்பவரை தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை மீட்க முடியாமல் கிரேன் மூலம் லாரி ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.