திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி அஇஅதிமுக எம்எல்ஏ செந்தில் குமார் தலைமையில் இன்று (ஜனவரி 17) காலை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.