ஆம்பூரில் காளை மாட்டுக்கு நீச்சல் பழக என்ற நபர் உயிரிழப்பு

51பார்த்தது
ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் இவர் கட்டிடப் பணிகளுக்குக் கம்பி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவர் 2 காளை மாடுகள் வைத்துக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் நடைபெறும் எருது விடும் விழாவில் தனது காளைகளை போட்டியில் பங்கேற்க வைத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி பழக்குவதற்காக தனது கிராமத்தின் பக்கத்து கிராமமான காரப்பட்டு பகுதியில் உள்ள சின்ன ஏரியில் நிரம்பியுள்ள மழை நீரில் காளை மாடுகள் நீச்சல் பழக கொண்டு சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதியில் காளைகளுக்கு நீச்சல் பழக்கிக் கொண்டிருந்த போது திடீரென சேற்றில் சிக்கி, காளை மாட்டின் உரிமையாளர் பரந்தாமன் நீரில் மூழ்கி வெளியே வராததால் உடன் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காப்பாற்ற முயற்சி செய்தும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளை மாட்டிற்கு நீச்சல் பழக்குவதற்காக ஏரியில் நீச்சல் பழக்கிக் கொண்டிருந்தபோது சேற்றில் சிக்கி காளை மாட்டின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி