ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான திறப்பு விழா.

51பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 165 கோடி ரூபாய்
அம்ரூத் நிதியின் கீழ் பாதாள சாக்கடை தொடங்கும் பணி வழங்கப்பட்டது.


இதை அடுத்துஇந் திட்டம் நிறைவு பெற்று இன்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திறக்கப்பட்டது.


இதையடுத்து இன்று ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்கான தொடக்க பணியினை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதையடுத்து ஆம்பூர் நகராட்சி பகுதி நான்கு கழிவு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கழிவு நீரும் நிலையம் மற்றும் இரண்டு கழிவு நீர் உயர்திகள் மூலமாக கழிவு நீர் சேர்க்கப்பட்டு 16. 71 எம் எல் டி சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆனது பாலாற்றில் விடப்படுகிறது இத்திட்டத்தில் 18, 187 வீடுகள் மூலம் பெறக்கூடிய கழிவுநீரானது சுத்திகரிக்கப்படுகிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையாளர் சந்தானம் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் நித்தியானந்தம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி