ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

79பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களான மிட்டாளம் , வீராங்குப்பம், குமாரமங்கலம் , கரும்பூர் தேவலாபுரம், பச்சகுப்பம், பெரியாங்குப்பம் , மோதகப்பள்ளி, கதவாளம், காரப்பட்டு, மலையாம் பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்ததால் சாலைகளில் கழிவு நீருடன் சேர்ந்து மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. , ரெட்டி தோப்பு பகுதியில் ரயில்வே சுரங்க பாதையை மழை நீர் சூழ்ந்ததால் நகராட்சி பணியாளர்கள் ஜேசிபி மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி