திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் முரளி, இவர் அதே பகுதியில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில், இன்று காலை முரளி வாணியம்பாடிக்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, கிரிசமுத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் முரளியின் செல்போனை கண் இமைக்கும் நேரத்தில், பறித்துச்சென்றுள்ளனர், பின்னர் இதுகுறித்து முரளி வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
ஆம்பூர் வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க கூடிய சூழல் நிலவி வருவதால் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்