விஷம் குடித்து முதியவர் தற்கொலை

71பார்த்தது
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 64). இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி