சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி ப்ளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று காலை ஆம்பூர் அடுத்த மரபட்டு பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.