கே.வி குப்பத்தில் மாமரங்களுக்கு பயிர் காப்பீடு

52பார்த்தது
கே.வி குப்பத்தில் மாமரங்களுக்கு பயிர் காப்பீடு
கே. வி. குப்பம் வட்டார தோட்டக்கலைதுறை, மலைப்பயிர்கள் துறைகளின் உதவி இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -மாமரம், வானிலை பயிர் காப்பீடு திட்டம் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியால், முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது. கே. வி. குப்பம் சுற்று வட்டாரங்களில் உள்ள மா விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த காப்பீட்டு திட்டம் அதிகமான மழைப்பொழிவு, குறைவான வெப்பநிலை, மிக அதிகமான வெப்ப நிலை ஆகியவற்றிற்கான காப்பீடு ஆகும்.இந்த திட்டத்தில் இணைவதற்கு சிட்டா, அடங்கல், வங்கி புத்தகம், ஆதார், வாரிசுதாரர் ஆதார் ஆகியவற்றின் நகல்கள், தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களை இணைத்து பயன்பெறலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம், கே. வி. குப்பம் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி