பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்.

64பார்த்தது
பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில்
கே. ஏ. ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஆம்பூரை அடுத்துள்ள பெரிய வெங்கடசமுத்திரம் கிராமத்தில் 3. 1. 2024 முதல் 9. 1. 2024 வரை நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா இன்று 3. 1. 2024 பெரிய வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்றது இந்த துவக்க விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்.. ஏ. முகமது ஷாஹின்ஷா வரவேற்புரை ஆற்றினார், ஊராட்சி மன்ற தலைவர். என். காயத்ரி நவீன் குமார் தலைமை வகித்தார். பெரிய வெங்கடசமுத்திரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். எச். பி. தனசிங் குமார் முன்னிலை வகித்தார்.

மேலும் ஊராட்சி தொடக்கப் பள்ளியை ஆசிரியை செல்வி. சி. அறிவு, கிராம நிர்வாக அலுவலர். எஸ். பாரதி , ஊராட்சி மன்ற செயலாளர். எஸ். பழனி, ஊராட்சி மன்ற உறுப்பினர். எம். நித்யா முரளி, மற்றும் சமூக ஆர்வலர். ஆர். நவீன் குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர் கல்லூரியின் முதல்வர் முனைவர். த. ராஜமன்னன் அவர்கள் முகாம் துவக்க உரையாற்றினார் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர். ஆர். துரை நன்றியுரை ஆற்றினார். விழாவில் வெங்கடசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி