திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (33) கட்டிட மேஸ்திரி.
இவரது மனைவி மஞ்சு (28). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.