கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்!

76பார்த்தது
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் மேல்கன்றாம்பல்லி, கீழ்கன்றாம்பல்லி, துத்திப்பட்டு, பழையமனை, புதுமனை ஆகிய பகுதியில் குடிசை வீடுகளில் வசிக்கும் 7 ஏழை குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ், துணைத்தலைவர் விஜய், வீடுகள் உதவி திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி, பணி மேற்பார்வையாளர் நிர்மலா, ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை தரமாகவும், விரைந்து கட்டி முடிக்கவும் ஊராட்சி தலைவர் உத்தரவிட்டார். அப்போது ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி