திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி , நரியம்பட்டு வழியாக ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர பேருந்து (5B) பைபாஸ் சாலையில் ராஜீவ் காந்தி சிலை சர்கிள் அருகில் வந்த போது திடீரென கீர் விழாமல் நடுரோட்டில் பழுதாகி நின்றதால் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மற்றும் பேரணாம்பட்டு ஆம்பூர் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சர்க்கிளில் நான்குபுறமும் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்ற போது ஸ்டார்ட் ஆகாததால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெங்களூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆம்பூர் பேரணாம்பட்டு குடியாத்தம் செல்லும் பைபாஸ் சாலை என நான்கு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
அரசு போதுமான புதிய பேருந்துகள் வாங்காமல் பழைய ஓட்டை ஓடைசல் பேருந்துகளையே இயக்கி வருவதால் நாள்தோறும் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அரசு பேருந்துகள் பழுதாகி நிற்பதால் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்