கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் தெரு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சீரான மின்விநியோகம் இல்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும் மனுவாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த வாழைப்பந்தல் - ஆரணி சாலையில் நெசவாளர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.