மணல் கொள்ளையை தடுக்க முடியாத அதிகாரிக்கு விவசாயக் கேள்வி

51பார்த்தது
ஆம்பூர் அருகே பாலாற்றில் இரவு நேரங்களில் கடத்தும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை கிராம நிர்வாக அலுவலரை சரமாரியாக கேள்வி கேட்ட பால் வியாபாரி

வருவாய்த்துறையினர் அரசியல்வாதிகள் காவல் இருந்து பணம் வாங்கி செல்வதாக குற்றச்சாட்டு


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் பாலாற்றில் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் தொடர்ந்து மணல் கடத்துவதாக புகார் எழுந்தும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து வந்தனர் இந்த நிலையில் இன்று சோமலாபுரம் வழியாக துண்டு தோல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி கிராம நிர்வாக அலுவலர் கே சி பெருமாள் விசாரணை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி எழிலரசன் என்பவர் இரவு நேரங்களில் தொடர்ந்து பாலாற்றில் மணல் கடத்துவதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும், அதற்காக இரவு நேரங்களில் வருவாய்த்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் காவல் இருந்து பணம் கையூட்டு பெற்றுச் செல்வதாக குற்றம் சாட்டிய அவர் சாலையில் செல்லும் டிராக்டர் பிடித்து போட்டோ எடுக்கும் கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தலை ஏன் தடுக்க முடியவில்லை? சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி