ஆம்பூரில் ஜேசிபி இயந்திரம் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.

69பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், பாலூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் சதாம் உசேன் என்ற இளைஞர் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தான் வேலை செய்து வந்த கடை உரிமையாளர் தண்டபாணியின் மகன் வகுசன் (4) என்ற சிறுவனை சதாம் உசேன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு மாதனூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாதனூர் பேருந்து நிலையம் அருகே வேலூர்- ஆம்பூர் செல்லும் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே வந்த ஜேசிபி இயந்திரம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் தலை மற்றும் கைப்பகுதியில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து தலைமறைவான ஜேசிபி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி