ஆம்பூர் குடோனில் 30 கிலோ ஆன்ஸ் பறிமுதல்

82பார்த்தது
ஆம்பூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்

இருவர் கைது உமராபாத் போலீசார் நடவடிக்கை


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகொமேஸ்வரம் பகுதியில் உமரபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடையில் ஹான்ஸ் பாக்கெட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பிர்தோஸ் அஹமத் என்பவரிடமிருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகள் வாங்கியதாக சுரேஷ்குமார் தெரிவித்ததின் பேரில் இதனை தொடர்ந்து பேர்ணாம்பட்டு பகுதிக்கு சென்ற போலீசார் பிர்தாஸ் அஹமத் குடோனில் சோதனை செய்தனர். இதில் குடோனில் இரண்டு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ ஹான்ஸ் பாக்கெட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிர்தோஸ் அகமதை போலீசார் கைது செய்து 30 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி