பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் "வணங்கான்" படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் உள்ளதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்தான புகைப்படம் ஒன்றையும் அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தலைசிறந்த கலைஞரின் ஒவ்வொரு நாளும் மாயாஜாலமாக இருக்கிறது. அதற்கு நீங்கள் சாட்சியாக இருப்பீர்கள்... இதைத் திரையில் காண காத்திருக்க முடியவில்லை... மறக்க முடியாத பயணம் என தெரிவித்துள்ளார்.