தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே சாலையோரம் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் மீட்கப்பட்டது. வேனில் இருந்த 8 பேரில் ஜெர்சோன், ஜெஸிட்டா, ஷைனி கிருபாகரன் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய நிலையில், 5 பேரின் உடல் 5 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. மீட்புக்குழுவினர் வேனில் இருந்து மோசஸ், வசந்தா, ரவி கோசல் பிச்சை, கெஞ்சி அல்கிருபா மற்றும் ஷாலினி ஆகியோரின் சடலங்களை மீட்டனர்.