அமெரிக்காவில் காதலர் தினத்தையொட்டி முன்னாள் காதலர்களை பழிவாங்கும் விதமாக கரப்பான் பூச்சி, எலி, காய்கறிகள் ஆகியவற்றிற்கு அவர்களின் பெயரை சூட்டிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை ஒரு உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்தனி தொகை வசூலிக்கப்படுகிறது. இதற்கு பெயர் சூட்டப்பட்டதும், பிற விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டு விடுகிறது. இதற்கான சான்றிதழை, பரிசு போல் இணையதளம் வாயிலாக முன்னாள் காதலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.