திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், மதிமுக பங்கேற்கவில்லை. தனக்கு மாநிலங்களவை சீட் கொடுக்காததால் வைகோ வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.