முருகப் பெருமான், வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என புராணங்கள் சொல்கின்றன. அதனால் அவர் அவதரித்த திருநாளை வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். இன்று முருகன் கோயிலுக்கு செல்வது சிறப்பு. வீட்டில் உள்ள முருகப் பெருமான் படத்தை சுத்தம் செய்து அழகிய மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். முருகனுக்குரிய பாடலை கேட்டு "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி மனதார வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும்.