வைகாசி விசாகம்: திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

54பார்த்தது
வைகாசி விசாகம்: திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
முருகன் பிறந்த வைகாசி விசாக நன்னாளில், முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த வகையில், முருகனின் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் இன்று (ஜூன் 9) காலை முதலாக ஏராளமான பக்தர்கள் வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி விரத வழிபாடுகளை மேற்கொண்டு முருகனை தரிசித்து மகிழ்ந்தனர். பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் ஒருசில பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி