சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் அக்டோபர் 10ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) வைகை, பல்லவன் ரயில்கள் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. மேலும், வைகை எக்ஸ்பிரஸ் மதுரை - தாம்பரம் இடையே மற்றும் மறுமார்க்கமாக தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி - தாம்பரம் இடையே மற்றும் மறுமார்க்கமாக தாம்பரம் - காரைக்குடி இடையே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.