வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இந்திய வனப்பணி அதிகாரி எல்.நாதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.