திருவாரூர் மாவட்டம் சோனாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 55 வயதான இந்துமதி, காந்தி என்பவரிடம் ரூ. 9 லட்சம் கடன் வாங்கி வட்டியுடன் ரூ. 20 லட்சம் கொடுத்து கடனை அடைத்தார். ஆனால் கடன் பத்திரத்தை கொடுக்காமல் காந்தி இழுத்தடித்தார். இந்நிலையில் டிராக்டரை வைத்து இந்துமதி மீது ஏற்றி கொலை செய்துவிட்டு காந்தி தப்பிவிட்டதாக தெரிவித்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.