சென்னையில் அடுத்த மழை குறித்து அப்டேட்

54626பார்த்தது
சென்னையில் அடுத்த மழை குறித்து அப்டேட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 19-21 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜானின் எக்ஸ் பதிவில், “டிச. 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் மழை பாதிப்பே இன்னும் ஓயாத நிலையில், அடுத்த மழை அப்டேட் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக அமையும்.