உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் 40 சாலையோர காய்கறிக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள காய்கறிகள் புல்டோசர் மூலம் நசுக்கி அளிக்கப்பட்டன. காய்கறி வியாபாரிகள் அழுது கொண்டே கெஞ்சிதையும் கண்டுகொள்ளாமல் நகராட்சி அதிகாரிகள் காய்கறிகளை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.