இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து மத்திய கிழக்கில் நிலவும் மோதலை
இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். வன்முறை தாக்குதல்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, இந்தியாவுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 506-வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை.