மகாராஷ்டிரா: பவன் - ஆஷா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சில காலமாக "உனக்கு சமைக்கவே தெரியவில்லை, உன் அம்மாவிடம் சென்று பணம் வாங்கி வா" என்று பவனும் அவரின் பெற்றோரும் ஆஷாவை கொடுமைப்படுத்தி வந்தனர். ஆஷாவின் தந்தை பணம் கொடுத்த பின்னரும் அவருக்கு துன்புறுத்தல் தொடர்ந்தது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த ஆஷா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் பவனை போலீஸ் கைது செய்துள்ளது.