தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடப்பதாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம், "யாருங்க இங்க பிறப்பால் முதல்வர் ஆனார்? மக்கள் தேர்ந்தெடுத்துதான் முதல்வரானார். அந்த அறிவுக்கூட இல்ல அந்த ஆளுக்கு" என்று காட்டமாக பேட்டியளித்துள்ளார்.