துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் உதயநிதிக்கு புதிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் உதயநிதி அதிருப்தியில் உள்ளார். குடும்ப அரசியலை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதலமைச்சர் பேசுகிறார் என்று தெரிவித்தார்.