மாலத்தீவில் வரும் ஆகஸ்ட் 17 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள Asian Surfing Championship போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள 8 அலைச்சறுக்கு வீரர்களில், 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான அலைச்சறுக்குப் போட்டியில் பங்கேற்கவுள்ள தயின் அருண், ஹரிஷ், கிஷோர்குமார், தங்கை கமலி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.