தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்வர்லு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இருவரும் ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இதில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், வெங்கடேஷ்வர்லு என்பவர் ராஜ்குமாரை நடுரோட்டில் வைத்து 15 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.