திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்

65பார்த்தது
திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்
திமுகவில் 23 அணிகள் இருக்கும் நிலையில், ஆசிரியர், பேராசிரியரை கொண்ட கல்வி அணி, மாற்றுத்திறனாளிகளுக்கு என சார்பு அணிகள் புதிதாக உருவாக்கப்படவுள்ளது. இதனால் திமுகவின் துணை அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயருகிறது. இந்த அணிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் புதிய நிர்வாகிகளுக்கு வரும் காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு, கட்சி ரீதியாக நிலவும் பொறுப்புகள் தொடர்பான பிரச்சனை ஓரளவு கட்டுக்குள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி