இரட்டை இலை சின்னம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், "அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும். தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது" என ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.