வெடித்து சிதறிய இரண்டு ஐஸ்கிரீம் குண்டுகள்

61பார்த்தது
வெடித்து சிதறிய இரண்டு ஐஸ்கிரீம் குண்டுகள்
கேரள மாநிலம் கண்ணூர், அஞ்சரகண்டியில் இன்று(மே 13) அதிகாலை 3 மணியளவில் சாலையில் வீசப்பட்ட 2 ஐஸ்கிரீம் வெடிகுண்டுகள் வெடித்தன. ஐஸ்கிரீம் வடிவிலான கொள்கலனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெடிகுண்டுகள் ஐஸ்கிரீம் வெடிகுண்டுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள கோயிலில் காணிக்கை செலுத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக இடையே நடந்து வரும் மோதல் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பதற்றம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி