இரும்பு ஏணி 2 சகோதரர்களின் உயிரைப்பறித்த சோகம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பாஸ்தியில் இன்று (ஜூன் 10) காலை சஷி பூஷண் (26) மற்றும் அவரது தம்பி விஷ்வ வல்லப் (23) இரும்பு ஏணியை தூக்கியபடி சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் 11,000 வோல்ட் மின்கம்பியில் ஏணி உரசியுள்ளது. இதனால் இருவரும் உயர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துள்ளத்துடிக்க பரிதாபமாக உயிரிழந்தனர். ஆசிரியர் சஷியின் மரணம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.