தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

57085பார்த்தது
தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசியில் கடந்த 2 நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி