சேலம் ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் 721 விவசாயிகள் 4,597 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.12,589-க்கும், அதிகபட்சமாக ரூ.16,599-க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.11,189-க்கும் அதிகபட்சமாக ரூ.13,599-க்கும் ஏலம் போனது. மொத்தமாக ரூ.3 கோடியே 76 லட்சத்திற்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.