தமிழ் நடிகையான சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழில் இவர் காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரான நவ்நீத் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தனக்கு திருமணமானதை சாக்ஷி அகர்வால் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.