தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் முயற்சி பண்ணுங்க.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

180பார்த்தது
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் முயற்சி பண்ணுங்க.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் ஹிந்தி திணிப்பை முயற்சிக்கும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழகம், மேற்கு வங்காளத்தில் இந்த முயற்சியை செய்து பாருங்கள்,” என அவர் முதல்வர் தேவெந்திர பட்னாவிஸுக்கு சவால் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹிந்தியை பள்ளிகளில் கட்டாய மூன்றாவது மொழியாக்கும் உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளையடுத்து, அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி